Nojoto: Largest Storytelling Platform

White ஊழிக் காலத்தின் அருகே நடக்கும் பெரும் அமைத

White ஊழிக் காலத்தின் 
அருகே நடக்கும் 
பெரும் அமைதியின், சிறு துகளின் 
பேராற்றலின் சூட்சுமத்தை
இங்கே நான் உணர்ந்து 
ஆழ்ந்த அமைதியோடு பயணிக்கிறேன்..
என் தளர்வான நடையை பார்த்த 
சிலரோ புரியாமல் கேலி செய்து 
பெரும் சிரிப்போடு 
தகாத வார்த்தைகளால் கடிந்து 
என்னை கடந்த அடுத்த நொடியில் 
அந்த ஆழி பேரவையின் பெரும் பசிக்கு 
உணவாகிறார்கள்...
நானோ அவர்கள் சடலத்தை பொறுமையாக தேடி 
இந்த பூமிக்குள் முறையாக அடக்கம் செய்து 
எந்த சலனமும் இல்லாமல் பயணிப்பதை 
அந்த காலம் சற்றே புன்முறுவலோடு 
வேடிக்கை பார்த்து என்னோடு பயணிக்கிறது சூட்சமமாக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #sad_quotes
White ஊழிக் காலத்தின் 
அருகே நடக்கும் 
பெரும் அமைதியின், சிறு துகளின் 
பேராற்றலின் சூட்சுமத்தை
இங்கே நான் உணர்ந்து 
ஆழ்ந்த அமைதியோடு பயணிக்கிறேன்..
என் தளர்வான நடையை பார்த்த 
சிலரோ புரியாமல் கேலி செய்து 
பெரும் சிரிப்போடு 
தகாத வார்த்தைகளால் கடிந்து 
என்னை கடந்த அடுத்த நொடியில் 
அந்த ஆழி பேரவையின் பெரும் பசிக்கு 
உணவாகிறார்கள்...
நானோ அவர்கள் சடலத்தை பொறுமையாக தேடி 
இந்த பூமிக்குள் முறையாக அடக்கம் செய்து 
எந்த சலனமும் இல்லாமல் பயணிப்பதை 
அந்த காலம் சற்றே புன்முறுவலோடு 
வேடிக்கை பார்த்து என்னோடு பயணிக்கிறது சூட்சமமாக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #sad_quotes