நான்கே அடிகளின் தள்ளிவைப்பும் ஒரு சில நாட்களின் தீண்டாமையும் தாங்காமல் தவிக்கும் இந்நாட்களில் என் மனம் ... அழகில்லா பெண்டிர் சிலர் - என பெண்களே சொல்லச்சொல்ல தீண்டாமை தீயில் வெந்தெரிந்து சில மாமிச சிலைகள் - தம் தம் தாபம் தானே தீர்க்க - சிந்துமென அஞ்சி சிந்திவிடாமல் ஸ்விகரிக்க பட்ட ஒவ்வோர் கண்ணீர் துளியின் கசப்பிணையும் ஓர்கிறது என் மனம் நயமில்லா இனம் பலர் என - சக மனிதர்களே தள்ளத்தள்ள தீண்டாமை தீயை தாமும் நெருங்கி பேதைமை குளிர்காயும் தொலற்ற பல மாமிச மரங்களையும் - அவை தொன்றுதொட்டு தோப்புகளாகி, காடுகளாகி, ஒதுங்கி நின்று, ஓங்கி விட்ட பெருமூச்சுகளின் உஷ்ணத்தினையும் உணர்கிறது என் மனம் கண்ணில்லா கண் இவையென கம்பீரமாய், கண் இறுக்கிக்கொண்ட கற்சிலைகளின் இரக்கமும், தன்னையும் சிலர் தீண்டிலாரே என்றெண்ணி வெறுஞ்சிலையாய், நிலை நின்று, நிலை இழந்த - பல கடவுளர்களின் பராக்கிரமும், வேற்று மொழி மந்திரங்களின் இரைச்சலில் தோடுடைந்த செவியோர் -அவர் மொழியில்லா கதரல்களையும், பார்க்கவும் கேட்கவும் செய்கிறது என் மனம் எண்ணற்ற கண்களாம் எங்கெங்கும் இருக்குதாம் வெறும் சாட்சியாய், மீதமாய், ஊமையாய் மாறி, வெகுஜன அடர்த்தி குறைந்து பழுப்பு நுரையாய் கரைத்தள்ளபட்ட சில செல்லறுத்த கட்டுமரங்களின் பயனற்ற பயணத்தையம் வியப்பின்றி வியக்கிறது என் மனம் கண்ணுக்கு தெரியா எதிரிகள் பலவுண்டு நம் மன வீட்டில் கண் திறந்து பார் அகக்கண் திறந்து பார் - என குன்றா வளர் சூழல் சக்கரமாய் அலையோசை இசைக்கும் Fibonacci சங்கும் உண்டு நம் எல்லோரிடத்தில் ஓட்டத்தின் நடுவில் நீ நின்று பார் கூட்டத்தில் ஒருவனா நீயென்று பார் கண் திறந்து பார் அகக்கண் திறந்து பார் sarithan saami sangu