புதுமைப்பெண்ணே கண்ணம்மா சீற்றம் சாகா சூறைக்காற்றடி வீரம் என்றும் போர்வாள் ஏந்தி சிங்க நடை போடும் மங்கையடி. தீப ஒளியே கண்ணம்மா கார்காலத்தில் மின்னும் தீயின் சேயடி இறையின் ஓவியமே கண்ணம்மா இருண்ட கண்களில் நிற்கும் சித்திரமடி. சூரியக்கதிரே கண்ணம்மா நீல வானத்தில் மிதக்கும் குங்கும வண்ணமடி வைரத்தாரையடி கண்ணம்மா இரவில் விரியும் கருங்கம்பளத்தில் அழகாய் மின்னும் வெளிச்சமடி. Inspired by Bharathiyar. A கண்ணம்மா poem. #tamil #tamilquotes #tamilkavithai