Unsplash எப்படியும் ஒரு நிகழ்வு நடந்த பிறகு இன்னொரு நிகழ்வு நடக்கத்தான் போகிறது அதை முன்பே அறிந்துக் கொள்ள ஏன் அவ்வளவு துடிக்கிறீர்கள்? அதை முன்பே அறிந்துக் கொண்டால் மட்டும் உங்களுக்கு சாதகமாக முடிந்து விடப் போகிறதா என்ன? அந்த நிகழ்வு உங்களுக்கு என்ன தர விரும்புகிறதோ அதை அது செவ்வனே நிகழ்த்தி விட்டு அது பாட்டுக்கு எந்தவித சலனமும் இல்லாமல் பயணித்து விடும்... நீங்கள் ஏன் வீண் சஞ்சலம் கொண்டு அதனோடு சண்டையிட பெரும் கோபங்கொண்டு அதை துரத்தி செல்கிறீர்கள்? அதை அப்படியே விட்டு விட்டு நீங்களும் சலனம் இல்லாமல் பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்! அது தான் பேரமைதி வாழ்வின் யாத்திரை! #இளையவேணிகிருஷ்ணா. நாள் 18/12/24/புதன் கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #camping