Find the Best இரவுகவிதை Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about
இளையவேணிகிருஷ்ணா
White மறையும் சூரியனுக்கு தெரியாது ... இரவெனும் பெருவெளியை ஒரு சாளரத்தின் கூட்டில் அடைப்பட்டு அவதிப்பட்டு ஒரு யுகமாக கடக்க இருக்கும் கோடான கோடி மனிதர்களின் சின்னஞ்சிறு மனவெளியின் வேதனையின் ரணங்கள்! #இரவுகவிதை. #இளையவேணிகிருஷ்ணா. நாள் 24/06/24/திங்கட்கிழமை. முன்னிரவு 9:03. ©இளையவேணிகிருஷ்ணா #good_evening_images
இளையவேணிகிருஷ்ணா
அந்த முன்னிரவு நேரத்தில் நீயும் மெல்ல மெல்ல என் செவிகளில் அபஸ்வரம் பாட நெருங்குகிறாய்... நானோ உன்னை மற்றவர்கள் போல இரக்கம் இல்லாமல் தள்ளி விட மனமற்று ரசித்துத் தொலைகிறேன்... அபஸ்வரமாக இருந்தாலும் உன் ரீங்காரமும் இசை தானே கொசுவே🎻😌. #இரவு கவிதை 🍁 #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #Path #இரவுகவிதை
#Path #இரவுகவிதை
read moreஇளையவேணிகிருஷ்ணா
யாரோ ஒருவரின் தேடலில் தான் இங்கே சில பேரின் சுவாசம் நிம்மதியாக இயங்குகிறது... #இரவுகவிதை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #mobileaddict
இளையவேணிகிருஷ்ணா
அரசியல் எனும் முட்டாள்களின் கூடாரங்களில் இளைப்பாறும் பறவைகள் தேசத்தின் மக்கள்! #இரவுகவிதை. #இளையவேணிகிருஷ்ணா. நாள்:08/01/24. திங்கட்கிழமை. ©இளையவேணிகிருஷ்ணா #GateLight
இளையவேணிகிருஷ்ணா
இறப்பு பல சூட்சமங்களை உள்ளடக்கி பயணிக்கிறது.. அந்த சூட்சமத்தில் ஆன்மா இருள் உலகத்தை அடைகிறதா இல்லை பேரொளி கொண்ட உலகத்தில் பயணிக்கிறதா என்பதை இங்கே நம்மோடு பயணிப்பவர்கள் தான் நமக்கு பிறகு இந்த பிரபஞ்சத்திற்கு எடுத்து செல்லும் தூதுவர்கள்... #இரவுகவிதை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #sunrisesunset
இளையவேணிகிருஷ்ணா
இரவின் ரகசியங்கள் எங்கே பத்திரப்படுத்தப்படுகிறது? அதன் ஆழ்ந்த அமைதியில் புதையுண்டு கிடப்பதை தவிர அதற்கு வேறேது போக்கிடம்? #இளையவேணிகிருஷ்ணா. #இரவுகவிதை. ©இளையவேணிகிருஷ்ணா #rosepetal
இளையவேணிகிருஷ்ணா
காமம் காதல் தாண்டி ஒரு அதீத நிலையை இங்கே எவருமே கண்டுக் கொள்ளாமல் ஆஹா ஓஹோ என்று மணிக்கணக்கில் பேசி தீர்க்கிறார்கள்! இங்கே அந்த அதீதத்தில் கரைந்தவர்கள் ஆழ்ந்த அமைதியில் கரைகிறார்கள்! #இரவுகவிதை. #இளையவேணிகிருஷ்ணா. ©இளையவேணிகிருஷ்ணா #Qala #அதீதநிலை
#Qala #அதீதநிலை
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited