Nojoto: Largest Storytelling Platform

Best கவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகவிதை, கவிதை_பலகை, இரவுக்கவிதை, கவிதை_வரி, போன்சாய்கவிதை,

  • 66 Followers
  • 6462 Stories

இளையவேணிகிருஷ்ணா

#snow

read more
Unsplash பொழுது புலர்வதும் 
மறைவதும் இங்கே சத்தம் இல்லாமல் 
நடந்துக் கொண்டே தான் 
இருக்கிறது...
நானும் பத்தோடு பதினொன்றாக 
இல்லாமல் கூடுதல் ரசனையோடு 
இந்த இயற்கையின் 
அதீத காதலை ரசித்து 
எனது கருவியில் படம் பிடித்துக் கொண்டே
நகர்ந்து கொண்டே இருக்கிறேன்...
காலமோ என் பின்னே நீ இப்படி 
இலக்கின்றி அலைவது சரியல்ல என்று 
கூவிக் கொண்டு 
என் பின்னால் ஓடி வருவதை ரசித்து 
அதையும் என் கருவியில் அடக்கி 
உற்சாகமாக நடக்கிறேன் அந்த அடர்ந்த காட்டுவெளியில்...
இது தான் என் வாழ்வின் முடிவில்லா பயணம் 
இங்கே எனது வாழ்வின் கணக்கில் 
வருடங்கள் எங்கே என்று 
எனக்கு தெரியவில்லை... 
நீங்கள் தெரிந்தால் கண்டுபிடித்து 
என்னிடம் ஒப்படைத்துச் செல்லுங்கள் 🦋🤷
என்று கொஞ்சம் சத்தம் போட்டு அறிவித்து விட்டு
இந்த பிரபஞ்சத்தில் மெதுவாக மிதக்கிறேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் :29/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #snow

Santirathevan_Kadhali

White  பல காதல் கதைகளைச் சேர்த்து வைத்தேன்
பல காதல் முறிவுகளுக்கும் நானே சாட்சி ஆனேன்
கூர்மையாக நான் இருக்கும் நேரத்தில்
எழுத்துலகையே ஒரு நொடியில் ஆட்டிப் படைப்பேன்

காகிதத்திற்கு ஆறுதல் சொல்லும் நண்பனானேன்
பலரின் புத்தகப்பையில் சுற்றுலா சென்றேன்
கைத்தொலைப்பேசிகள் இல்லா அந்த பொன்னானக் காலம்
பலரின் எழுத்துத்திறனை வெளிக் கொணர உறுதுணையாய் இருந்தேன்

தேய்பிறையைச் சந்திக்கும் நிலாவைப் போல
இறுதியில் என் வாழ்வும் தேய்ந்தே முடியும்
நிலவிற்கோ விடிவு காலம் உண்டு/
நானோ பலர் வளர்வதற்கு என் உடலை வருத்தி
எழுத்துலகிற்கே அர்பணித்து உலகிலிருந்து விடைப்பெற்றுச் செல்கிறேன்

©Santirathevan_Kadhali #love_shayari #life_lesson #SAD #motivatation

இளையவேணிகிருஷ்ணா

#Sad_Status

read more
White ஒன்றும் இல்லை என்று 
ஒரே சொல்லை சொல்லி சொல்லி 
ஆயிரம் யுகங்களை 
கடந்து விட்டேன்...
அந்த ஒரு சொல்லை 
நான் மறந்து இருந்தால் 
இன்று நான் ஒரு அபூர்வ உலகத்தை 
சிருஷ்டித்து இருந்திருக்கக் கூடும்...
அங்கே எந்தவித கல்மிஷமும் இல்லாத 
மனிதர்கள் இருந்திருக்கக்கூடும் என்றேன் 
அந்த காலத்திடம்...
காலமோ அதை விட இது தான் உனது 
ஆழ்ந்த துக்கத்தின் கீறல்களாக 
நான் உணர்கிறேன்...
இதோ பார் உனது துக்கத்தின் கீறல்கள் 
எனக்கு ஏற்படுத்திய வலியின் இரத்த கசிவு 
இன்னும் நிற்காமல் என் உடல் எங்கும் பயணிக்கிறது என்று என்னிடம் 
அதன் உடலை காட்டிய போது 
நான் விம்மி விம்மி அழுது அந்த காலத்தின் தோளில் சாய்கிறேன்...
அந்த காலமோ என்னை மிருதுவாக 
அதன் இரு கைகளால் அணைத்தது 
பெரும் காதலோடு மௌன மொழியில் 
ஆறுதல் சொன்னது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 26/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #Sad_Status

Santirathevan_Kadhali

#library

read more
Unsplash The Art of Letting Go  

To hold a moment, fleeting yet dear,  
Is to tether the heart to a shadow unclear.  
A bird in your hands will never take flight,  
Its song silenced under the weight of tight might.  

The art of letting go is a gentle release,  
A whisper of love wrapped in quiet peace.  
Like autumn leaves drifting from trees,  
Embracing the wind, they dance with ease.  

It’s in the tide’s ebb, the moon's soft descent,  
A cycle of endings, perfectly meant.  
Grief may linger like a shadowed song,  
Yet time teaches where we belong.  

In the stillness, new seeds take their place,  
Roots intertwine in life’s endless grace.  
To let go is not to forget, but to trust,  
That life renews even from dust.  

So open your hands and free the weight,  
Let love and loss meet their fate.  
For only in the letting go,  
Can we make room for hearts to grow.

©Santirathevan_Kadhali #library

Santirathevan_Kadhali

#Book

read more
Unsplash சோர்வடையும் போதெல்லாம்
பல நற்சிந்தனைகளை வழங்கி
எழுத்துலகிற்குள் என்னை மூழ்கச் செய்து
நான் பயணிக்கா காலங்களுக்கு
எழுத்தின் மூலம் என்னை அழைத்து
சென்று
எனக்குள் நல்லெண்ணங்களை உருவாக்கி
என்னை அதற்கு அடிமையாக்கி
என்னை ஆளும் புத்தகமும்
என் இரகசிய காதலி தானே...!

©Santirathevan_Kadhali #Book

Appu Buji

#lovelife

read more
Unsplash broken 💔🤕

©Appu Buji #lovelife

இளையவேணிகிருஷ்ணா

#library

read more
Unsplash எந்தவித வாசிப்பும் இல்லாமல் 
அந்த அபூர்வ மனிதனின் 
வாழ்வின் புத்தகத்தின் பக்கங்கள் 
வாசனை மாறாமல் என்னை ஒரு 
ஏக்க பார்வை பார்த்து 
பெருமூச்சு விடும் 
அந்த சப்தத்தில் இந்த பிரபஞ்சத்தின் நடுக்கத்தை 
உணர்ந்த அந்த காலமோ 
ஓடோடி வந்து என் கைகளில் 
அந்த புத்தகத்தை திணித்து விட்டு 
செல்கிறது...
நான் வரும் வரையில் 
இந்த புத்தகத்தின் வாசத்தையும் கூட 
எவரிடமும் நுகர விடாதே என்று சொல்லி விட்டு 
வேகமாக என்னை விட்டு நகர்கிறது...
நானோ செய்வதறியாது திகைத்து நிற்கும் சமயத்தில் அந்த புத்தகத்தை எவரோ அபகரித்து ஓடுவதில் நான் மூர்ச்சையாகி கிடக்கிறேன்...
அந்த காலமோ எனை பரிதாபமாக பார்த்து விட்டு 
அந்த புத்தகத்தின் அடையாளமான 
அந்த அபூர்வ மனிதனை 
தேடி இங்கும் அங்கும் அலைவதை 
நான் சூட்சமமாக வேடிக்கை பார்க்கிறேன் 
யார் அந்த அபூர்வ மனிதராக இருப்பார் என்று 
எண்ணியபடி...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #library

இளையவேணிகிருஷ்ணா

#GoodMorning

read more
White அந்த கண்ணாடி டம்ளரில் 
பொங்கி வழிந்து குதூகலித்து
எனை சீண்டல் பார்வையில் 
பெரும் போதையூட்டி
அழைக்கிறது வோட்கா!
நானும் என்னை கொஞ்சம் 
ஆசுவாசப்படுத்திக் கொள்ள 
மிடறு மிடறாக பருகி 
அதனிடம் காதல் மொழிகளை பேசி 
சரிகிறேன்...
என் மீது வழிந்தோடும் அந்த திரவமோ 
இது போல பல ஆயிரம் கதைகளை 
கேட்டும்  சலிக்காமல் 
என் கன்னத்தில் 
ஒரு பெரும் முத்தத்தை 
கொடுத்து அதன் மடியில் 
உறங்க செய்து அந்த இரவை 
கண்ணீரில் நனைத்து 
எனக்காக பிரார்த்தனை செய்து 
என்னை அரவணைத்து விடியும் நேரத்தில் 
கொஞ்சம் கண்ணயர்ந்து துயில் கொள்கிறது!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 24/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning

இளையவேணிகிருஷ்ணா

#bekhudi

read more
தேடிக் கொண்டு இருக்கிறேன் 
நான் அந்த காலத்தில் மென்று தின்று 
சக்கையாக துப்பிய அந்த நாட்களை!
இன்னும் ஒரு சிறு துளி மிச்சமாக 
அந்த சக்கையில் ருசி ஏதும் மிஞ்சி 
நான் சுவைப்பதற்காக காத்திருக்கிறதா என்று 
பெரும் ஏக்கத்தோடு!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 24/12/24/அந்தி மயங்கும் வேளையில்.

©இளையவேணிகிருஷ்ணா #bekhudi

இளையவேணிகிருஷ்ணா

#good_night

read more
White கொஞ்சமும் சோர்வில்லாமல்
புத்துணர்ச்சியோடு
ஓடிக் கொண்டே இருக்கும் 
என் சாயலில் பயணிக்கும் 
காலத்தை நான் கொஞ்சம் ஆச்சரியமாக 
வேடிக்கை பார்த்து 
சிலை போல நகராமல் 
அந்த நெடுஞ்சாலையின் 
நடுவில் நிற்கிறேன் ...
என்னை கடந்து செல்லும் 
காலமெனும் வாகனத்தில் 
பயணம் செய்பவர்கள் ஏதேதோ 
எனை ஏசி விட்டு செல்கிறார்கள் என்று 
என்னிடம் கிசுகிசுத்து நகர்கிறது 
அந்த கால் இல்லாத காலம்...
நானோ இரு கால்கள் இருந்தும் 
ஊனமாகி முடங்கி கிடக்கிறேன் 
அந்த சாலையில்...
இங்கே நிஜமெது நிழலெது??
கொஞ்சம் புரிந்தவர்கள் சொல்லி விட்டு 
என்னை சாலையின் மறு பக்கத்தில் 
சேர்த்து விட்டு செல்லுங்கள்...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 22/12/24/ஞாயிற்றுக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #good_night
loader
Home
Explore
Events
Notification
Profile