Nojoto: Largest Storytelling Platform

Best kavikuyilkanmani Shayari, Status, Quotes, Stories

Find the Best kavikuyilkanmani Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about kavi the poetry, kavi shayari in hindi, hasya kavi sammelan ki kavita in hindi, kavi sammelan by kumar vishwas 10, free download dr kumar vishwas latest kavi sammelan in mp4,

  • 1 Followers
  • 78 Stories

கவிக்குயில் கண்மணி

எதிர்பார்ப்பது அவ்வளவு சுலபமில்லையென்றாலும்..
எதிர்பார்க்காமல் காத்திருப்பது வரம்! 
கதிரவனின் வருகை பாராமல், 
கனவில் கரையும் சந்திரனைப் போல 
இவள் கண்களுக்கு புலப்படாமல்,
நட்சத்திரமாய் மின்னித் திரிகிறாய்!❤️

 #kavikuyilkanmani #yqbaba #yqaestheticthoughts #yqkanmani #yqquotes #yqthoughts

கவிக்குயில் கண்மணி


சாரலாய் மனதில் ஊடுருவும் தென்றல்!...
சத்தமின்றி மொட்டவிழ்க்கும் மலர்கள்!...
வான்மின்னும் நட்சத்திரங்கள்!...
வானவில்லின் வரவேற்பில் 
மழையின் வருகை!...
அணையா விளக்கின் 
அகலாத நிலவொளி!...
இவையாவும்,
எவரும் அறியாத தருணங்களில் 
இயற்கை இசைந்திடும் 
இரகசியமென்னும் ஓரங்க நாடகமே!...
 #kavikuyilkanmani#yqbaba#yqkanmani#aestheticthoughts

கவிக்குயில் கண்மணி

மெதுவாய்...
இருளெனும் சாயம் பூசும்,
ஓர் நடுசாம இரவது!...
ஆழ்ந்த உறக்கத்தின் நடுவே,
யாரோ உற்று நோக்குவது 
போன்றதோர் உணர்வு!...
விழித்து பார்க்கையில், 
வானத்தில் அவன்,..
ஆம், அவனேதான்!..
இருளின் மேலே 
நிலவொளி(அவன்) படர...
இவளை இன்னொரு 
நிலவென வானழைத்தான்!...
 #yqbaba#yqkanmani#kavikuyilkanmani

கவிக்குயில் கண்மணி

புதிதான காலை...
புலராத நாளை...
பறக்கும் நினைவுகள்...
பிறக்கும் எண்ணங்கள்...
துளிர்விடும் கனவு...
துள்ளியோடும் மனது...
கட்டுக்கடங்கா பூரிப்பு...
கட்டுப்படாத ஆராவாரம்...
எனக்கே எனக்காய் 
கிடைத்த பரிசாய்,
எழில்மிகு பார்வையாய் 
தென்படுகிறது பூமி!!.. #yqbaba#yqdidi#yqkanmani#kavikuyilkanmani

கவிக்குயில் கண்மணி

எதார்த்தமாக என்னுள் வந்தாய்...
என் ஏக்கங்களை உயிர்ப்பித்தாய்...
எண்ணினேன்...வெளிப்பட்டாய்!..
எண்ணங்களாய், நீ உருப்பெற்றாய்!!..
என்னை மறந்தேன்...
உன்னை நான் வியந்தேன்!!..
சோகத்தின் முடிவிலும் நீ!..
சந்தோசத்தின் மலர்ச்சியிலும் நீ!..
ஏதும் இல்லாதபோதும்...
என்னோடு தொடர்வதும் நீ!..
எல்லைத் தாண்டிய உலகில்,
என்றென்றும்... என் 
வரமாய் உன்னுடனே!...
என் இனிய கவிதையே!!!💜✍️... #yqbaba#yqdidi#worldpoetryday#yqkanmani#kavikuyilkanmani#buddymantra#aestheticthoughts

கவிக்குயில் கண்மணி

வயல்வெளி முதல் 
விண்வெளி வரை,
வலம்வரும் 
அக்னிஜோதியாம் நீ!...
எண்ணியவை முடிக்கும் 
தொன்மையன்றோ!...
எல்லாமே உன்னில் 
தொடக்கமன்றோ!...
போராளியாம் உனது வாழ்க்கையில்!...
போராடுவதே உனது வேட்கையாம்!...
நின் வாழ்வின் நிகழ்காலம் 
உன் கையில்!...
நிகழ்வதையும் உனதாக்கு 
உன் தன்னம்பிக்கையில்!...
நிலவின் உருவே ஒளியாயிரு!...
நில்லாது ஓடும் நதியாயிரு!...
இல்லவே இல்லாது போகும் 
எல்லைக்கோடுகள்!!... #happywomensday#yqbaba#yqkanmani#yqdidi#kavikuyilkanmani

கவிக்குயில் கண்மணி

ஏதேனும் உளறேன்!
கேட்கிறது காகிதம்...
என்னை வழிநடத்து!
உருகுகிறது பேனா'மை'...
எல்லைத் தாண்டிச் செல்வோம் வா!
அழைக்கிறது சிந்தனைச் சிறகு...
போகிறாயா?அப்படியே போய்விடு!
என்கிறது மனம்!!... #yqbaba#yqdidi#yqkanmani#kavikuyilkanmani

கவிக்குயில் கண்மணி

எழும் எண்ணங்கள் ஆயிரம்!...
எழாத மொழிகள் பல்லாயிரம்!...
எழுதிவிடலாமென்றாலோ, 
எட்டாக்கனியாய் எதிர்முனையில்!...
என்ன செய்ய நானும்!..ஏதோ
ஏமாற்றம் தர இயலாமல்,
எழுத்துக்களால் உள்ளத்தில் அலங்கரித்தேன்!...ஏற்பாயாக!... #yqbaba#yqkanmani#yqdidi#kavikuyilkanmani

கவிக்குயில் கண்மணி

சிறிதும் குறையாது,
புன்னகையை உதிர்க்கிறாய்...
நீ வாடும் வரையில்!..
சிதறித்தான் போகிறேன்...
நீ ஒவ்வொரு முறை 
புதிதாய் மலருகையிலும்!!..

 #yqbaba#yqdidi#yqkanmani#kavikuyilkanmani

கவிக்குயில் கண்மணி


நினைவுடன் அன்றாடம் போராடி,.. 
நிறையாமல் நித்தமும் உருண்டோடி,..
மனம்விட்டு,..
மலரும் மௌனமதை உடைத்து,..
எல்லையில்லா வான்நோக்கி...
வாய்விட்டு கத்தி சொல்லனும்!..
என்னை மறந்து!!..
 #yqbaba#yqdidi#yqyourquotesandmine#yqkanmani#kavikuyilkanmani
loader
Home
Explore
Events
Notification
Profile