Nojoto: Largest Storytelling Platform

Best இளையவேணிகிருஷ்ணா Shayari, Status, Quotes, Stories

Find the Best இளையவேணிகிருஷ்ணா Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 958 Stories

இளையவேணிகிருஷ்ணா

#camping

read more
Unsplash எப்படியும் ஒரு நிகழ்வு நடந்த பிறகு 
இன்னொரு நிகழ்வு நடக்கத்தான் போகிறது 
அதை முன்பே அறிந்துக் கொள்ள 
ஏன் அவ்வளவு துடிக்கிறீர்கள்?
அதை முன்பே அறிந்துக் கொண்டால் மட்டும் 
உங்களுக்கு சாதகமாக 
முடிந்து விடப் போகிறதா என்ன?
அந்த நிகழ்வு உங்களுக்கு என்ன தர விரும்புகிறதோ அதை அது செவ்வனே 
நிகழ்த்தி விட்டு அது பாட்டுக்கு எந்தவித சலனமும் இல்லாமல் பயணித்து விடும்...
நீங்கள் ஏன் வீண் சஞ்சலம் கொண்டு 
அதனோடு சண்டையிட 
பெரும் கோபங்கொண்டு 
அதை துரத்தி  செல்கிறீர்கள்?
அதை அப்படியே விட்டு விட்டு 
நீங்களும் சலனம் இல்லாமல் 
பயணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!
அது தான் பேரமைதி வாழ்வின் யாத்திரை!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #camping

இளையவேணிகிருஷ்ணா

#GoodMorning

read more
White அப்படி ஒன்றும் மார்கழியை 
கொண்டாட எனக்கு அதில் 
எதுவும் தற்போது இருப்பதாக 
தெரியவில்லை!
கடும் குளிரின் தாக்கத்தில்
போர்வைக்குள் அந்த மிதமான வெப்பத்தையும் 
ஊடுருவ துடிக்கும் இதமான குளிரையும் 
ரசிப்பதை நிறுத்தி விட்டு 
அந்த குளிரில் எழுந்து 
ஏதேதோ செய்து 
நான் ஒரு ஒழுங்கான 
தெய்வீக மனுஷி என்று 
நிரூபிக்க தற்போது மனமில்லை 
ஒரு தெளிவான அதீத ரசனையை தவிர 
எனக்கு இங்கே எதுவும் ஆனந்தத்தை 
கொடுத்து விடப் போவதில்லை என்று 
தீவிரமாக நம்பும் சாதாரண மனுஷி நான் 
அவ்வளவு தான்!
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning

இளையவேணிகிருஷ்ணா

#weather_today

read more
White நிரந்தமற்ற இந்த வாழ்வின் பயணத்தில் 
வெளியே வேடிக்கை பார்த்து நடந்து பழகிய சிலர் 
இங்கே தனக்கு நடக்கும் நிகழ்வுகளும் 
சுவாரஸ்யமான வேடிக்கை தான் என்று 
மறந்து அந்த நிகழ்வோடு சண்டை போட்டு
அந்த வேடிக்கை தரும் சுவாரஸ்யத்தை 
மறந்து பெரும் சலனத்தோடு பயணிப்பதை 
பார்த்த காலம் 
அவர்களை சுவாரஸ்யமான 
வேடிக்கை மனிதர்கள் இல்லையா  என்று 
என்னிடம் சொல்லி கலகலவென நகைத்து 
நான் பதில் சொல்வதற்குள் 
எனை வேகமாக கடந்து செல்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன் கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #weather_today

இளையவேணிகிருஷ்ணா

#sad_qoute

read more
White இங்கே காலத்திற்கு கட்டளையிடும்
அதிகாரத்தை எத்தனை கோடி யுகங்கள் 
தவம் இருந்தாலும் பெற முடியாது என்று 
தெரிந்தும் அந்த அதிகாரத்தை பெற 
இங்கே அகங்காரத்தோடு பெரும் தவத்தை 
இயற்றிக் கொண்டு இருக்கிறீர்கள்...
இதோ நீங்கள் அந்த உக்கிர தவத்தை 
இயற்றும் போதே ஊழிக் காலத்தின் 
பேரவையில் சிக்கி
 எவரும் கண்டறியா 
அந்த பெரும் மணல் திட்டின் 
ஆழத்தில் புதையுண்டு போவதை 
அதே காலம் எந்தவித அகங்காரமும் 
இல்லாமல் வேடிக்கை பார்த்து 
உங்கள் ஆன்மாவின் அமைதிக்காக 
இங்கே சலனமில்லாமல் பெரும் தவம் இயற்றி 
தன் பயணத்தை தொடர்கிறது...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:18/12/24/புதன்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #sad_qoute

இளையவேணிகிருஷ்ணா

#sad_quotes

read more
White ஊழிக் காலத்தின் 
அருகே நடக்கும் 
பெரும் அமைதியின், சிறு துகளின் 
பேராற்றலின் சூட்சுமத்தை
இங்கே நான் உணர்ந்து 
ஆழ்ந்த அமைதியோடு பயணிக்கிறேன்..
என் தளர்வான நடையை பார்த்த 
சிலரோ புரியாமல் கேலி செய்து 
பெரும் சிரிப்போடு 
தகாத வார்த்தைகளால் கடிந்து 
என்னை கடந்த அடுத்த நொடியில் 
அந்த ஆழி பேரவையின் பெரும் பசிக்கு 
உணவாகிறார்கள்...
நானோ அவர்கள் சடலத்தை பொறுமையாக தேடி 
இந்த பூமிக்குள் முறையாக அடக்கம் செய்து 
எந்த சலனமும் இல்லாமல் பயணிப்பதை 
அந்த காலம் சற்றே புன்முறுவலோடு 
வேடிக்கை பார்த்து என்னோடு பயணிக்கிறது சூட்சமமாக...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24/புதன்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #sad_quotes

இளையவேணிகிருஷ்ணா

#sad_quotes

read more
White அடங்கி கிடக்கும் எரிமலை 
விஸ்வரூபம் எடுக்கும் போது 
அதை சுற்றி உள்ள பகுதிகள் 
சாம்பல் திருமேனியில் நனைந்து 
அந்த ருத்ரனின் சொரூபத்தில் 
ஊழி தாண்டவம் ஆடுவதை 
இங்கே எவராலும் அந்த நிகழ்வை
வேடிக்கை கூட பார்க்க முடியாது...
இங்கே வினையின் விளையாட்டை 
கேலி செய்பவர்களும் 
அந்த எரிமலை அருகில் 
சாம்பலாக அடங்கி கிடப்பர்...
அந்த நிகழ்வை பார்த்து 
நான் பெரும் அதிர்வோடு 
அந்த ஈசனுக்கு நிகராக 
அகோர தாண்டவம் ஆடி 
என் அகோர பசியை தீர்த்துக் கொள்வேன்..
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 18/12/24.

©இளையவேணிகிருஷ்ணா #sad_quotes

இளையவேணிகிருஷ்ணா

#Tulips

read more
White எல்லா சுவைகளும் 
என்னோடு ஆசையோடு 
பயணிக்கிறது!
ஆனால் ஒரு சுவையோடும் 
நான் அப்படி ஒன்றும் 
ஒன்றி விடுவதில்லை!
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #Tulips

இளையவேணிகிருஷ்ணா

#chaandsifarish

read more
உங்களை உயிர்ப்போடு 
எது வைத்துக் கொண்டு 
இருக்கிறதோ 
அதை ஆனந்தமாக செய்யுங்கள்!
அவ்வளவு தான் வாழ்க்கை!
இதில் பெரிதாக குழப்பிக் கொள்ள 
ஒன்றுமே இல்லை!
#காலை சிந்தனை ✨ 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/10/24/வெள்ளிக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #chaandsifarish

இளையவேணிகிருஷ்ணா

#sad_dp

read more
White தொலைந்து விட்ட பாதையை 
தேடி பயன் இல்லை...
உருண்டோடி எனை பதம் பார்த்து 
களிப்போடு சிரிக்கும் காலத்தின் 
கேலியிலிருந்து கொஞ்சம் 
எனை விடுவித்துக் கொண்டு 
இங்கே சாலையின் ஓரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை இந்த பிரபஞ்சத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள துடிக்கும் 
இந்த மாலை வேளையை 
ஆழ்ந்த அமைதியோடு 
வேடிக்கை பார்த்து 
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
விடை பெற்று போக துணிந்த கால்களுக்கு 
மட்டும் ஏதோவொரு பாதையை 
காட்டி விட்டு நகர்ந்து விடு என்று
காலத்திடம் 
சொல்ல துடிக்கும் இதழ்களை 
ஏனோ நான் கட்டுப்படுத்தி 
அங்கேயே நிற்கிறேன்...
இருளுக்கும் அந்த சாலைக்கும் 
பெரும் துணையாக இருந்து விட்டு 
போகட்டுமே என்று...
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 21/10/24/திங்கட்கிழமை/அந்திமாலை

©இளையவேணிகிருஷ்ணா #sad_dp

இளையவேணிகிருஷ்ணா

#moon_day

read more
White அந்த பட்டமரத்தின் கவலைகளை 
இங்கே யார் அறியக் கூடும் 
கொடிய விஷத்தை கக்கி 
உயிரோட்டம் நிரம்பிய 
இந்த பிரபஞ்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக 
உயிர் இழக்க செய்யும் மனிதர்களிடையே
அதை கவனிக்க எவரும் இல்லாமல் 
காற்றில் அசைந்தாடி நடனம் ஆடி 
அந்த முழு நிலவின் ஈர்ப்பை பெற்று விட 
அந்த மரம் போராடுவதை பார்த்து 
நிலவும் இரக்கம் கொண்டு 
தனது கிரணங்களால் பெரும் காதல் கொண்டு 
அணைத்துக் கொள்ளும் போது 
உயிர் பிழைத்து ஆனந்தம் கொள்கிறது...
இங்கே உயிரோட்டத்தின் மகத்துவம் 
பெரும் காதலில் உள்ளது என்று 
அந்த மூட மனிதர்கள் அறியமாட்டார்கள் என்று 
இந்த பிரபஞ்சம் ரகசியமாக பேசிக் கொள்கிறது...
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 22/07/24/திங்கட்கிழமை.
முன்னிரவு 8:54.

©இளையவேணிகிருஷ்ணா #moon_day
loader
Home
Explore
Events
Notification
Profile