Nojoto: Largest Storytelling Platform

யாராவது போய்விடுகிறார்கள் ஒரு காயம் திறந்தே இருக்க

யாராவது போய்விடுகிறார்கள்
ஒரு காயம் திறந்தே இருக்க,

யாரோ வந்துவிடுகிறார்கள்.
ஒரு பூ மலர்ந்தே இருக்க,

எப்படி நான் காப்பாற்றுவேன்
எப்படி நான் அகற்றுவேன்

என் சொந்த அகராதியில்
அந்த ‘யாரோ’ எனும் சொல்லை?

~ வண்ணதாசன்

©Seenivasan Rangasamy
  #tamilkavithai #tamilquotes #tamil