Nojoto: Largest Storytelling Platform

Best தமிழ்ப்பக்கம் Shayari, Status, Quotes, Stories

Find the Best தமிழ்ப்பக்கம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 24 Followers
  • 1020 Stories

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Camera #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #கவிதை

read more
White  ஆகாயத்தை பார்க்கின்ற போதெல்லாம் அந்த பறவைகளின் இறகினை களவாடி சிறகு தரித்து பறக்க நினைக்கிறேன்! உயிர் பிரிந்தால் காற்றில் கலந்து பறக்குமாம்! நான் உயிர் கொண்டு பறக்க துடிக்கிறேன்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Camera #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல்

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#milan_night #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#

read more
White  ஆகாயத்தை பார்க்கின்ற போதெல்லாம் அந்த பறவைகளின் இறகினை களவாடி சிறகு தரித்து பறக்க நினைக்கிறேன்! உயிர் பிரிந்தால் காற்றில் கலந்து பறக்குமாம்! நான் உயிர் கொண்டு பறக்க துடிக்கிறேன்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #milan_night  #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#goodnightimages #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #கா #கவிதை

read more
White வெற்றியை நோக்கி ஒருபோதும் நான் ஓடியதில்லை; ஆனால் ..
இலக்கை நிர்ணயிக்க தவறியதேயில்லை!
பேராசை கொண்டு எதன்பாலும் சாய்ந்ததில்லை! 
என் பேராசையே களைப்பில் படுத்தால் கண்ணுறக்கம் களையாது வந்தாக வேண்டும்!
சேர்த்து வைத்த சொத்துக்கள் என்று 
எதுவும் இல்லை! ஆனால்..
 நாளைய விடியல் வந்தால் நம்பிய வயிற்றுக்கு பசி எடுத்தால் சோறு  போடவேண்டும் என்ற கடமை இருந்தது!
அழுது புலம்புவதாலோ அலட்டி கொள்வதாலோ ஆகப்போவது எதுவும் இல்லை! 
கை மீறிய விஷயங்களை கைக்குட்டையால் மறைத்திட முடியாது!
கண்ணீரை துடைத்துக் கொள்ளலாம்! 
நாம் ஆசைப்பட்டது போல் வாழ்க்கை அமையாது ;
வாழ்க்கை நகர்வதைப் போல் நம்மை நகர்த்தக் கற்றுக் கொண்டால்..
நாம் ஆசைப்பட்ட வாழ்க்கை 
அதுவாகவே அமைத்துக் கொடுக்கும் 
அல்லது 
அமைந்து விடும்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #goodnightimages #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #கா

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

read more
White உயிரை அறுத்து கையில் கொடுத்தாலும்
சிலருக்கு செல்லா காசை
 சேமிக்க கொடுத்தது போல் தெரியும்! 
ஆயிரமே அன்பை அள்ளிக் கொடுத்தாலும்
கொடுப்பவர் இங்கு கொடை வள்ளல் என கொண்டாடப் பட போவதில்லை! 
பணத்தை எடை போடும் மனித 
தராசுகளுக்கு அன்பை பணத்திற்கு 
நிகராய் சமயெடை போடச் சொன்னால் தராசின்  பணத் தட்டு கனத்த எடையோடு  தரை தொட்டுத் தான் நிற்கும் !!
பாசம் வைத்த தட்டு அந்தரத்தில் தான் ஆடும் 
செல்லா காசு தான் என்று எவரும் 
தேவை முடியும் வரை சொல்வதில்லை! 
சொல்லாமலே காட்டி விட்டு போவார்கள் அன்பு என்றுமே செல்லா காசு தான்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #flowers #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதல்கவிதை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#akshaya_tritiya_2024 #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதலியம் #தகவல்கள் #வாழ்க்கை #கவிதை

read more
White அட்சய திருதியை
ஆபரணங்கள் வாங்கி மகிழும்..
பெண்களுக்கு மத்தியில் நானோ.. 
அட்சய பாத்திரமாய் இருந்திட ஆசைப்படுகிறேன்!! 
நகை விளம்பரம் வியபாரிக்கு லாபமே தவிர வாங்கியவனுக்கு அது பெரிதாய் 
லாபம் சேர்க்காது! 
இங்கு விளம்பரங்களுக்கு கிடைக்கும் மதிப்பு இதயங்களுக்கு கிடைப்பதில்லை!! 
வாழ்க்கையின் மகிமையே விளம்பரம் செய்வதாய் மாறிய நாகரிகம், 
வாழ்வை நரகமாய் மாற்றி அதையே
 நாகரிகம் என பிதற்றிக் கொள்கிறது!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #akshaya_tritiya_2024 #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #காதலியம் #தகவல்கள் #வாழ்க்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#SAD #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் # #கவிதை

read more
White உடை நாகரிகம்...!!

உடுத்தும் உடையில் மாற்றம் செய்வதால்.. 
உருவமோ உள்ளமோ மாறுவதில்லை! 
ஆள் பாதி ஆடை பாதி தான் என்றாலும்.. 
திருத்தம் இரண்டிலும் வேண்டும்! 
உடையால் மதிப்பென்று அகராதி ஒன்று இருக்குமாயின்.. 
இங்கு காந்தியோ... 
புத்தரோ... 
விவேகானந்தரோ... 
முருகப்பெருமானோ. .. 
மகான்
எனப்  போற்றப்பட்டிருக்க மாட்டார்கள்!! 
இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SAD #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#SunSet #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#காதல்#வாழ்கை #சஸ்பென்ஸ்

read more
நன்மையும் தீமையும்...!!

விதைத்தது எதுவாயினும்
விளைந்திடத் தானே செய்யும்
அது விதையானாலும் சரி
வினையென்றாலும் சரி! 
பிறரால் ஏது நிகழாது
உன் செயலே அதன் பயன்! 

இவள்... 
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #SunSet  #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம்#காதல்#வாழ்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை

read more
காதலின் விருப்பம்!!


நீ வேண்டும் என்பது என் 
வேண்டுதல் இல்லை! அப்படியும் 
  நீ இருந்தால் வாழ்க்கை இலகுவாக இருக்கலாம் என்பது நம்பிக்கை!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Happychocolateday #தமிழ்#தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #தமிழ்கவிதை #காதல் #வாழ்க்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#girlfriendproposeday #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தகவல்கள் #வாழ்க்கை #கவிதை

read more
காதலின் அகராதி..!!

உன்னோடு வாழ வேண்டும் என்று தீர்மானித்த பிறகு தான்.. பிரிவை தீர்மானித்தேன் காரணம் சேர்ந்த பின் பிரிவதை விட பிரிந்தே சேர்ந்திருப்பது காதலில் சுகம்!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #girlfriendproposeday #காதல் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தகவல்கள் #வாழ்க்கை

Andaman Tamizhachi (P.Uma Maheswari)

#Exploration #கவிதை #கவி_வனம் #கவி_சிறகுகள் #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல் #தகவல்கள் #வாழ்க்கை #சமூகம்

read more
loader
Home
Explore
Events
Notification
Profile