Nojoto: Largest Storytelling Platform

Best yqsaiadhu Shayari, Status, Quotes, Stories

Find the Best yqsaiadhu Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 521 Stories

Rajeshwari Thendapani

#இழப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani

read more
அன்பின் 
பொருட்டு
இழப்பை
பரிசளித்தவாறே
இயல்பாய்
நகர்த்திச் 
செல்கிற
திந்த 
வாழ்க்கை

இழப்பதும் 
புதிதல்ல 
அதைக் கடந்து
இயல்பாய்
வாழ்வதும் 
புதிதல்ல



 #இழப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani

Rajeshwari Thendapani

ஓர் குவளை குளம்பி
ஓர் இளையராஜா பாடல்
கையிலோர் புத்தகம்
நினைவில் நீ
நிஜத்தில் தனிமை

இவை யாவும் -விடுத்து
இதமாய் ரசிக்க 
கோடை மழை 

போதுமானதாக 
இருக்கிறது

 #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani

Rajeshwari Thendapani

துக்கம் 
எனை மென்று
முழுதாய்
திண்றுவிட்டால்
கூட பரவாயில்லை
 
மீதம் வைத்துவிட்டால்
என்ன செய்வதென்று
தெரியாது -நான்
தவிப்பது கொஞ்சம்
கொடுமையானது

 #yqraji #yqraju #yqsaiadhu

Rajeshwari Thendapani

நாம் நேசிக்கும் ஓர்
இதயத்திற்காக
நூறு இதயங்களை
சொற்களால்
குத்திக் கிழிக்க 
ஒரு போதும்
ஆமோதிப்பதே 
யில்லை
இந்தக் காதல்




 #yqraji #yqsaiadhu #yqraju

Rajeshwari Thendapani

#yqraji #yqRaju #yqsaiadhu #இரவுகள்-அழகானவை

read more
இந்த இரவு 
தான் எத்துனை 
கருணையுடையதாய்
இருக்கிறது

நான் அழும் போதெல்லாம்
அதன் கரங்கள் எப்போதும்
என் கண்ணீரை துடைத்து 
அணைத்துக் கொள்ள
எப்போதும் தயாராகவே
வுள்ளது...

அது மனிதர்களை 
போல் கருணையற்று
யில்லை


 #yqraji #yqraju  #yqsaiadhu 
#இரவுகள்-அழகானவை

Rajeshwari Thendapani

#ஏமாற்றம் #yqkanmani #yqraji #yqsaiadhu

read more
எப்போதும் 
ஏமான்றே
போகிறேன்
முன்பெல்லாம்
வஞ்சனையால்
இப்போதெல்லாம்
அன்பால்

மொத்தத்தில் 
ஏமாற்றம்
எனக்கு எப்போதும்
இணக்கமானது
தான்

நான் ஏமாற
எப்போதும்
ஆயத்தமாகவே
யுள்ளேன் #ஏமாற்றம் #yqkanmani #yqraji #yqsaiadhu

Rajeshwari Thendapani

ஏக்கங்கள் எனக்கு புதிதல்ல
முன்பெல்லாம்
உன் குறுஞ் செய்திக்காக
உன் அழைப்புகளுக்காக
நம் சந்திப்புகளுக்காக
உன் அணைப்பிற்காக
பின்னோர் முத்தத்திற்காக

ஆம் ஏக்கங்கள் 
எனக்கு புதிதல்ல





 #yqraji #yqsaiadhu

Rajeshwari Thendapani

நீ என்னோடு
இல்லாத 
போதெல்லாம்
உன் நினைவுகள்
என்னை
திண்கிறது
என்னோடு நீ
இருக்கும்
போதெல்லாம்
உன் முத்தங்களை 
நானும் என்
கன்னங்களையும்
நீயும்
திண்கிறாய்
 
ஆக மொத்தம்
காதல் நம்மை
திண்று தீர்த்து
விடுகிறது #yqraji #yqsaiadhu

Rajeshwari Thendapani

எப்போதும் போல் எழுகிறேன்
எப்போதும் போல் நீராடுகிறேன்
எப்பொழுதும் போல் வேலைக்குச் செல்கிறேன்
எப்போதும் போல் சிரித்து பேசுகிறேன்
எப்போதும் போல் வித விதமாய் உண்கிறேன் 
எப்போதும் போல் எனை அலங்கரித்துக் கொள்கிறேன் 
என் எல்லா வேலைகளையும் எப்போதும் போல சரிவர செய்கிறேன்

நிஜமாய் நான் எப்போதும் போலில்லை #yqraji #yqkanmani #yqsaiadhu

Rajeshwari Thendapani

ஒவ்வொரு முறையும்
நீ அழும் போதெல்லாம்
மரணத்து பிறக்கிறேன்
மரணம் பற்றிய 
பயமில்லை 
நீ அழுவதின் வலி
அதைவிடக் 
கொடூரமானது
 #yqraju #yqsaiadhu #yqlaksraj
loader
Home
Explore
Events
Notification
Profile